• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீதியில் பெண்ணுக்கு எமனாக மாறிய கார் உயிரிழந்த பெண் ஒருவர்

Juni 21, 2026

மீரிகம – திவுலபிட்டிய வீதியில் ஏற்பட்ட மற்றுமொரு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரேந்தபொல பகுதியில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி பெண், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ரேந்தபொல, மீரிகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஆவார்.

காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.