• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் தெல்லிப்பழையில் பெண் உட்பட இருவர் கைது

Okt. 20, 2026

சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் இன்று (19) கைது செய்துள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

மீட்கப்பட்ட உபகரணங்கள்

இவர்களிடமிருந்து 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 95250 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர் 2, கம்பிச்சுருள் 1, அடுப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.