• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சித்திரைப்புத்தாண்டு பிறக்கும் நேரம்; கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்!

Apr 13, 2023

தமிழ் – சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,

வருடம் பிறக்கும் நேரம்

14.04.2023 – வெள்ளிக்கிழமை பி.ப 02.03 மணி

புண்ணிய காலம்

14.04.2023 – மு.ப 10.03 முதல் பி.ப 06.03 வரை

இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கல்பித்து சிரசில் – கொன்றை இலையும் காலில் – புங்கம் இலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவும்.

ஆடை நிறம்

வெள்ளை நிற பட்டாடை வெள்ளை கரையமைந்த ஆடைகளை அணிதல் நலம்

அணியும் ஆபரணம்

முத்து, வைரம்

தோக்ஷ நடசத்திரங்கள்

ரோகிணி, மிருகசிரிடம் 3ம், 4ம் கால்கள், திருவாதிரை, புனர்பூசம் 1ம், 2 ம், 3ம் கால்கள், அத்தம், உத்தராடம் 2ம் , 3ம், 4ம் கால்கள், திருவோணம் மற்றும் அவிட்டம், (இயன்றளவு தவறாது மருத்துநீர் தேய்த்து குளித்து தான தருமங்கள் செய்யவேண்டும்.

கைவிசேக்ஷேடம்

கைவிசேக்ஷேடம் பெறும் நேரம், 15.04.2023 – மு.ப 07.52 முதல் மு.ப 09.00 மணி வரை 16.04.2023 மு.ப 07.49 முதல் மு.ப 09.48 மணிவரை கைவிக்ஷேடம் பெறுவதற்கு சுப நேரமாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed