• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் ?

Jan 31, 2024

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 93 வது இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது.

 ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

இப்பட்டியலில் 90 புள்ளிகளுடன் டென்மார்க் நாடு ஊழலற்ற நாடாக முதலிடத்தில் உள்ளது. 39 புள்ளிகளுடன் இந்தியா 39 வது இடத்தைப் பிடித்துள்ளது.  11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியாக நடைசி இடத்தில் அதாவது 180 வது இடத்தில் உள்ளது.

மேலும், நிர்வாக வெளிப்படத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட காரணிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், மொத்தம் 180 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed