• So.. Mai 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கொழும்பில் காணமல் போயுள்ள யாழ் இளைஞன்

கொழும்பில் காணமல் போயுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன்…

யாழ் நைனாதீவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை (15) மாலை வேளை குளவி…

இன்று அதிகரிக்கும் வெப்பம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின்…

கோப்பாயில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!

யாழ்ப்பாணம் – கோப்பாயில் ஆண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (16-05-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் உள்ள வீடொன்றின் அறையில் இருந்து…

இலங்கையில் டிக்டாக் செயலி பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சட்டத்தரணிகள்

டிக் டொக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கூறுகையிலேயே ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா இதனை சுட்டிக்காட்டினார்.…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில்…

கணினி கல்வியறிவு வீதம் உயர்வு

2022ஆம் ஆண்டில் இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. திணைக்கள தரவுகளுக்கு அமைய 2021 ஆம் ஆண்டு 35 சதவீதத்தமாக காணப்பட்ட கல்வியறிவு 0.7 சதவீதமாக…

சீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நேற்று (14) முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி மொரவக்க கல்வி வலயத்துக்குட்பட்ட…

இலங்கையில் பேருந்துகளில் வரும் புதிய நடைமுறை

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜி.பி.எஸ்.…

இலங்கையில் அதிகரிக்கப்படும் வேலை நேரம்

தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களிலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார் .…

வவுனியாவில் துப்பாக்கி சூடு! பறிபோன இரு உயிர்கள்

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நீலியாமோட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது வீட்டின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed