• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த உக்ரேனிய கதாநாயகன்.

Mrz 9, 2022

உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தில் இணைந்து போராடிய அந்நாட்டு நடிகர் பாஷா லீ ரஷியாவின் வெடிகுண்டு தாக்குலுக்கு பலியானார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்கலாம் என உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் இணைந்து ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த வாரம் உக்ரைன் நடிகர் பாஷா லீ உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார்.

இந்நிலையில், தனது நாட்டை காப்பாற்றும் போது ரஷிய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் கடந்த 6-ம் தேதி நடிகர் பாஷா லீ தனது உயிரை தியாகம் செய்தார். லீ 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி-நகைச்சுவைத் திரைப்படமான செல்ஃபி பார்ட்டி மற்றும் விளையாட்டு அதிரடித் திரைப்படமான தி ஃபைட் ரூல்ஸ் ஆகிய திரைப்படம் மூலம் புகழ் பெற்றார்.

நடிப்பைத் தவிர, பிரபலமான உக்ரேனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘டே அட் ஹோம்’ தொகுப்பாளராகவும் சிறந்து விளங்கினார்.

நடிப்புடன், டப்பிங், பாடல் மற்றும் இசையமைப்பிலும் பெயர் பெற்றார். கடந்த சனிக்கிழமை பஷா லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், கடந்த 48 மணிநேரமாக ரஷிய ராணுவத்தை எதிர்த்து நமது வீரர்கள் போராடியதை கண் முன்னே பார்க்க முடிந்தது. உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed