• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்சில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் நடந்த சம்பவம்!

Apr 8, 2022

பாரிஸ் இலங்கை தமிழர்களின் கடைகளுக்கு முன்னால்  இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்து   கடையில் இருந்த மூன்று பேரை கத்தியால் குத்தி கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

12வது வட்டாரத்தில் தமிழர்கள் நடத்தி செல்லும் கடைக்கு முன்னால் குடிபோதையில் வந்த இளைஞன் ஒருவர் அங்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடத்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் கடையில் இருந்த மூன்று பேரை கத்தியால் குத்தி கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் ஒருவரை காயப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் குறித்த நபர் இலங்கையரின் கடைக்கு சென்று கண்ணாடியை உடைத்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்த முனைந்த நிலையில் இலங்கையர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இலங்கையருக்கும் குறித்த நபருக்கும் இடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டதை அடுத்து கடையை விட்டு குறித்த நபர் வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையரின் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த மற்றுமொருவரை காயப்படுத்த விட்டு அவர் அங்கிருந்து செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் பாரிஸ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் போது 3 பேரின் பயங்கர அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். கத்தியை காட்டி அச்சுறுத்திய நபரை, கத்தியை கீழே வைக்குமாறு பொலிஸார் உத்தரவிட்ட நிலையில், நபர் கத்தியுடன் அங்கிருந்து பத்து மீட்டர் தூரம் ஓடி கட்டடம் ஒன்றிற்குள் நுழைந்துள்ளார்.

அவரை துரத்தி சென்ற பொலிஸார் அந்த நபர் வெளியே வராத வகையில் கதவினை பூட்டி அவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய இளைஞன் எனவும் பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed