• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் வீடு வைத்திருப்போருக்கும் வீடு வாங்க காத்திருப்போருக்கும் அதிர்ச்சி தகவல்

Jan 27, 2023

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் போன்றே உலகிலேயே பணக்காரான நாடாகிய சுவிட்சர்லாந்திலும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

இப் பணவீக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் வீடுகள், அதற்கான கடன் வரிகள் என இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தை விட இரட்டிப்பாக வட்டிவீதம் அதிகரித்துள்ளது.

சுவிஸில் சொத்து உரிமையாளர்கள், அதாவது வீட்டு உரிமையாளர்கள் அல்லது எதிர்காலத்தில் வீடு வாங்கக் காத்திருப்போருக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தியாகவே இருக்கும்.

2022ம் ஆண்டு வரைக்கும் நிலையான வட்டி விகிதத்தை செலுத்தியவர்கள் இந்தாண்டு முதல் இரண்டு மடங்காக வட்டிவிகிதங்களை செலுத்த வேண்டும் என பணவர்த்தக நுகர்வோர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்திருப்பது,

தற்போதைய சராசரி வட்டிவீதம் ஐந்தாண்டு நிலையான வட்டிவீதத்திற்கு 2.54 சத வீதகாவும்,

10 ஆண்டு காலத்திற்கு நிலையான வட்டி வீத, 2.76 சத வீதகாமவும் அதிகரித்துள்ளது.

இதுவே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்தாண்டு 5 வருட நிலையான வட்டிவீதம் 1.01 வீதமாகவும், 10 ஆண்டு நிலையாண்டுக்கு 1.26 வீதமாகவும் இருந்துள்ளது.

இவ்வாறு திடீரென 2.54 வீதமாகவும், 2.76 வீதமாகவும் இரு மடங்கு அதிகரித்தமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு நிலையான வட்டிவீதத்தை வைத்திருப்பீர்களேயானால் அவர்களுக்கு இது பொருந்தாது. இந்தாண்டு உங்கள் சொத்துக்களுக்கான அடமானங்கள் முடிவடையுமாயின் அதனை மீள புதிப்பிக்கும் பட்சத்தில் இப் புதிய வட்டிவீதமே அறவிடப்படும்.

இது புதிய வீடு வாங்க காத்திருப்போருக்கும், இந்தாண்டு வட்டிவீதத்தை மீள புதுப்பிக்கும் அனைவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என மேலும் அத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed