• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

500 பேரிடம் மட்டுமே இருக்கும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு?

Feb 3, 2024

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக (பாஸ்போர்ட்) ஜப்பானுடைய கடவுச்சீட்டு கருதப்படுகிறது. ஜப்பான் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

ஆனால் மால்டாவின் இறையாண்மை இராணுவத்தின் உருப்பினர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு, உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக விளங்குகிறது.

தனக்கென தனி நாடு, சாலைகள் இல்லாவிட்டாலும் கார் ஓட்டுநர் உரிமம், ஸ்டாம்ப், நாணயம் என எல்லாவற்றையும் மால்டா கொண்டுள்ளது.

வலிமையான கடவுச்சீட்டு

மால்டா கடவுச்சீட்டு முதன்முதலில் 1300-ல் வழங்கப்பட்டது. அதன் மூலம் தூதர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் ஆவணங்களை சரிப்பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல்வேறு நாடுகளின் கடவுச்சீட்டுகளில் காணப்படும் அம்சங்களை உள்ளடக்கும் விதமாக மிகவும் வலிமையான கடவுச்சீட்டாக மாறியது.

உலகில் வெறும் 500 பேர் மட்டுமே இந்த சக்திவாந்த கடவுச்சீட்டை பயன்படுத்துகின்றன.

கடவுச்சீட்டுக் கட்டணம் 5000 ரூபாவினால் அதிகரிப்பு !

இயேசு கிருஸ்துவின் ரத்தத்தை பிரதிபளிக்கும் விதமாக உள்ள இந்த கடவுச்சீட்டு, இறையாண்மை தூதரக உறுப்பினர்கள், அதன் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே உள்ளது.

இந்த கடவுச்சீட்டில் நிறுவனத்தின் பெயர் தங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

500 பேரிடம் மட்டுமே இருக்கும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா! | World S Most Power Full Passport

இந்த கடவுச்சீட்டை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது குறைந்தபட்சம் 100 ஆண்டுகள். ஏனெனில் இந்த இறையாண்மை தலைவர்கள், தங்கள் வாழ்நாளில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 85 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியும் உள்ளது.

44 பக்கங்கள் கொண்ட இந்த பாஸ்போர்டிற்கு பின்னால், மால்டீஸ்-ன் சிலுவை அச்சடிக்கப்பட்டிருக்கும் அதேவேளை புகைப்படங்களோ, வேறு ஏதேனும் உருவங்களோ அதில் குறிப்பிடப்பட்டிருக்காது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed