• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிசூடு: மூவர் பலி

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிசூடு: மூவர் பலி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.…

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி…

பிறந்தநாள் வாழ்த்து. சுதாகரன் தவேந்திரன் ( 22.01.2026,ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள் ,மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும்…

சனி-புதன் உருவாக்கிய லாப திருஷ்டி யோகம் ; இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அடிக்கடி தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் ஜனவரி 20 ஆம் திகதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும்,…

யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறனர் இந்த…

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பாவனை தொடர்பில் பரிசீலனை!

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சமூக ஊடகத் தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துமாறு 60-க்கும் மேற்பட்ட தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம்…

அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் இன்று (21) முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அதன்படி, முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்ட…

10 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2026

யாழ்.சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் 21.01.2026 இன்றாகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத மனிதன். 5…

அதிகரிப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் ; இன்று முதல் அமுல்

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு,…

யாழில் இருவருக்கு மரண தண்டனை!! யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும்…

கிளிநொச்சியில் உயிரை மாய்த்த 23 வயது இளம் பெண்

கிளிநொச்சி புன்னை நீராவியை பிறப்பிடமாகவும் புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட பரணிதரன் சானுகா எனும் 23 வயதான இளம் குடும்பப் பெண் 19.01.2026 நேற்று தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் உயிர் மாய்த்ததற்கான காரணம என்னவென்று தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.