• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு திடீர் தடை.

Jun 11, 2022

பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இரவு 10 மணிக்கு மேல் திருமண கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அந்நாட்டு அரசு சனிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் திருமண கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் திருமண விருந்தில் ஒரே ஒரு உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் திருமண கொண்டாட்டங்களுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானில் வாகன எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எரிபொருட்களை இறக்குமதி செய்ய போதுமான அளவு பணம் கையிருப்பு இல்லை என வெளிப்படையாகவே பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வாரம் முன்பு வரை 10.30 பில்லியன் டாலராக இருந்த பாகிஸ்தானின் அந்நிய செலாவனி கையிருப்பு, கடந்த 6ம் திகதி நிலவரப்படி 190 மில்லியன் டாலராக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed