• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை வாகன சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !

Nov 22, 2022

இலங்கையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு D Merit முறை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சாரதிகள் செய்யும் தவறுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் 24 டீமெரிட் புள்ளிகளுக்கு மேல் உள்ளவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறையை அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சாரதிகள் மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் வாகனத்தை செலுத்துமாறும் அழகியவண்ண கேட்டுக்கொண்டார். புதிய மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி சேவையை ஆரம்பிக்க ஸ்ரீலங்கா மொபிடெல் மற்றும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், புதிய ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் முதல் நாளே அவர்களுக்கு முதல் குறுஞ்செய்தி அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பவர்களின் அறிவை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் எடுக்க அவர்களை ஊக்குவிக்கவும் இந்த குறுஞ்செய்தி சேவை செயல்படுத்தப்படுகிறது மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் வரை இந்த குறுஞ்செய்தி சேவை தொடரும்.

எதிர்காலத்தில் அனைத்து ஓட்டுநர்களையும் இலக்காகக் கொண்டு இந்த குறுஞ்செய்தி சேவையை செயல்படுத்த தேசிய சாலை பாதுகாப்பு சபை முடிவு செய்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed