• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு இன்றுடன் 70 ஆண்டு பூர்த்தி !

Mai 29, 2023

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

முதன்முதலாக 1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.

இந்த நிகழ்வின் 70 ஆவது இன்றுகொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இன்று நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஏட்மன்ட் ஹில்லரி, டென்ஸிங் நோர்கே ஆகியோரின் மகனமாரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை கடந்த 70 வருடங்களில் 6,000 இற்கும் அதிகமானோர் அடைந்துள்ளனர். எனினும், ஏறுவதற்கு ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக எவரெஸ்ட் சிகரம் காணப்படுகிறது.

கடந்த 70 வருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், இவ்வருடம் 12 பேர் உயிரிழந்துடன் ஐவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed