• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை.

Jun 3, 2023

வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது.

பயனர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மேலும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் மெட்டா நிறுவனம் புதிய புதிய புதுப்பிப்புகளை(update) அறிமுகம் செய்து வருகிறது.

அதற்கமைய ஹேக்கர்களும் வாட்ஸ்அப் செயலியை முடக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தற்போது வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அண்ரோய்ட் தொலைபேசிகள் புது விதமான சிக்கல் ஒன்றை எதிர்கொள்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

„அண்ரோய்ட் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இப்போது உலா வருகிறது.

வாட்ஸ்அப் செயலி முடங்கி விடும்

ஒரு குறிப்பிட்ட தனி நபரிடம் இருந்தோ, அல்லது குழுவிலோ மேற்கொள்ளப்படும் உரையாடலின் போது நமக்கு வரும் புதிய யுஆர்எல் லிங்க்கை நாம் தொடர்ந்தால் உடனடியாக நமது தொலைபேசிகளில் உள்ள வாட்ஸ்அப் செயலி முடங்கி விடும்.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் உரையாடல்களாக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் அல்லது வணிக குழுவாக இருந்தாலும் எளிதாக ஹேக்கர்கள் ஊடுருவி விடுகிறார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2.23.10.77 என்ற அண்ரோய்ட் புதுப்பிப்பானது மிக எளிதாக இந்த தாக்குதலுக்கு உள்ளாகிறது.

ஏனைய புதுப்பிப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகினாலும், மேலே குறிப்பிட்ட புதுப்பிப்பானது அதிகமான பாதிப்பிற்குள்ளாகிறது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed