• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2022

  • Startseite
  • யாழ்.சிறுப்பிட்டி சந்தியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.சிறுப்பிட்டி சந்தியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சந்தியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் மோட்டார் சைக்கிளில்…

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய தகவல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்பொழுது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். அதன்படி பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பிரயோக பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக கம்பிகள்,…

6 வயது சிறுமியின் உயிரை பறித்து சென்ற ரயில்!

கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை (28-05-2022) காலை இடம்பெற்றுள்ளது. மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதியே…

ஆப்பிரிக்காவில் கிராமத்தையே கொன்று குவித்த பயங்கரவாத கும்பல்!

ஆப்பிரிக்காவில் பயங்கரவாத குழுக்கள் அதிகரித்துள்ள நிலையில் கிராமம் ஒன்றையே பயங்கரவாத அமைப்பு ஒன்று சூறையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அபாயகரமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.…

நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறைசார் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின்…

யாழ் குடாநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட‌ அறிவித்தல்

எரிவாயு கொள்கலன் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான எரிவாயு கொள்கலன்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால், கிடைக்கப்பெறும் எரிவாயு கொள்கலன்களை சீரான…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென…

பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு.

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள்…

கடவுச்சீட்டை பெற முண்டியடிக்கும் மக்கள்.

நாட்டின் தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று ஒரே நாளில் வழங்கப்பட்டன. அத்துடன் கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத்…

இலங்கையில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய 74 வயது முதியவர்

இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். நெலுவ – களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன் கொடகே சந்திரதாச என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்…

ஆபிரிக்காவில் பெண்ணை கொலை செய்த ஆட்டிற்கு 3 ஆண்டு சிறை

ஆப்பிரிக்காவில் பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு விதமான வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் சில உலகளவில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், விவாத பொருளாகவும் மாறிவிடுகின்றன. அப்படியான…

குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்.

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வருடாந்தம் சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தருவதாக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல…

யாழ் விமான நிலைதிற்கு மூடு விழா?

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed