• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2022

  • Startseite
  • ராணி II ஏலிசபெத் இறுதிச் சடங்கு: உலகத் தலைவர்கள் 500 பேர் அஞ்சலி!

ராணி II ஏலிசபெத் இறுதிச் சடங்கு: உலகத் தலைவர்கள் 500 பேர் அஞ்சலி!

இங்கிலாந்து மகாராணியாக நீண்ட நாட்களாக அரியணையில் அந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் , கடந்த 8 ஆம் தேதி தன் 97 வயதில், உடல் நலக்குறைவால் காலமானார். அவர் உடல் லண்டன் மா நகரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டரில்…

அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்!

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இந்த சேவை வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது…

சனி சென்றவர் ஞாயிறு சடலமாக மீட்பு

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை (17) இயந்திர படகில் மூன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் நேற்று (18) கடலில் தவறி விழுந்து…

வவுனியா மாமடு பகுதியில் திடீரென பரவிய காட்டுத் தீ!

வவுனியா மாமடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் பலமணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மாமடு சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடிரேன தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து சூரிய மின் உற்பத்தி நிலையத்தில்…

இலங்கையின் 05 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!

ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை யாழ் இளைஞர் அருந்தவராசா- புவிதரன் முறியடித்துள்ளார். தற்போது புவிதரனிடம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன்) இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும். எனவே இலங்கை…

யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்கள்

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும் (வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் 36 ஆவது வாரத்திற்குள் இலங்கையில் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு…

இத்தாலியை ஒரே நாளில் மூழ்கடித்த கனமழை! 9 பேர் பலி

இத்தாலியின் மத்திய பகுதியில் ஒரே நாளில் பெய்த கனமழையில் ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் மார்ச்சே பகுதியில் ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பங்கு மழை, ஒரே நாள் இரவில் முழுவதுமாக கொட்டி தீர்த்ததை…

யாழ். – மீசாலை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்!

யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் தொழிச்சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஒட்டுத் தொழிற்சாலையில்…

வீடியோகேம் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானியரை தாக்கிய மின்னல்

செப்டம்பர் 5, திங்கட்கிழமை தனது ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்த எய்டன் ரோவன் (Aidan Rowan), இரவு 10:30 மணியளவில் உரத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் ஒரு கனமான உணர்வை உணர்ந்ததாகவும் கூறினார். இங்கிலாந்தின் அபிங்டனில் வசிக்கும் 33…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான். 530 குழந்தைகள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் மரணம்

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல குடும்பத்தினர் கனமழை மற்றும்…

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தந்தையின் மடியில் கிடந்த நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.டி. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில். உடல்நலக்குறைவு காரணமாக 4 வயது குழந்தையை பெற்றோர் பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed